பின் தொடருபவர்கள்

Monday, June 21, 2010

அசுணப் பறவை

     பழைய காலத்தில் அசுணம் என்ற ஒருவகைப் பறவை இருந்ததாம். அதன் செவிகளுக்கு இனிய நளினமான இசையை உணர்ந்தே பழக்கமாம். விவகாரமான கெட்ட ஓசைகளைக் கேட்க நேர்ந்து விட்டாலே போதுமாம். துடி துடித்துக் கீழே விழுந்து உயிர் பிரிந்து விடுமாம்..

பிறக்கும் போதே இறந்த குழந்தைஅன்னையின் கருவறை மறவாமல் இருக்க,
மனனம் செய்து கொண்டிருந்த வேளையில்,

என்னுடைய ஜனனமும், மரணமும்....!!!!

மருதாணி

                                                                                   
                                                                                   கைகளும் இலைகளும்
குழைந்துப் 
பெற்றெடுத்த
குழந்தை...

அவள் வாழ்வுதாமரை இலையில் உருண்டோடி
ஆற்றில் கலந்த தண்ணீர் துளி போல,
அவள் இதழில் உருண்டோடி
கடலில் கலந்தன கண்ணீர்த் துளிகள்...
நா வந்தடைந்ததும், உப்பைக் கசக்கவில்லை
அத்துளிகள்---
மாறாய் தேனாய் இனித்தன...
......

மாவடு

எத்துணை கோடிகளுக்கு 
அதிபராயினும்,
பாட்டி கைபட்ட அந்த 
பழைய சாத மோர் கரைசலுக்கும், மாவடுவிற்கும் 
என்றுமே தமிழன் அடிமைதான்...
அன்னை மடி எவ்வளவு சுகமானதோ...
அவ்வளவு சுகமான 
அமுதமது... 

தென்றல்

தேன்மதுரத் தமிழோசை 
செவிவந்து சேர்த்திடுவாய்!
செல்வமளிக்கும்
இயற்கை அன்னையே!
உன் ஓசைக்கு ஓய்வில்லையா?
உன் மீது இச்சை கொள்ளாத,
மனமுண்டோ இப்பாரினில்?
தாயே உன் கண்களைத் திற;
கவிதைகள் பிறக்கட்டும்,
கவிஞர்கள் பிழைக்கட்டும்...!!!!!!

 

Saturday, May 29, 2010

உன்னை நினைத்து கிறுக்கிக்
கொண்டிருந்த
தனிமை நிசப்த இரவில்,
என் பேனா முள்ளும் காகிதமும்
பேசிக்கொள்ளும் ஒலியும்,

மின்சாரம் இல்லா இவ்விரவில்,
என் கையோடு கூடிய   பேனா
நிழலின் ஒளியும்,


மழையும்,  காற்றும்  நின்ற
புழுக்கத்தில்
என் நெற்றியில் வடியும்
வியர்வையும்,


மெல்ல தென்றல் வீச ஆரம்பித்ததில்,
நடனமிடும் சாளரத்தின் ஆடையும்,


நடுநிசியிலும் திருட்டுத்தனமாய்
கிறுக்கிக் கொண்டிருக்கும் மூடத்தனமான அசாத்தியத் தைரியமும்,


உடைகளும்,புத்தகங்களுமாய் கிடந்த
என் படுக்கை அறையின்
அலங்கோலங்களையும் அரை வெளிச்சத்தில்
இரசித்தபடி,


இப்படியாக என்னென்னவோ மனதிற்குள்
உளறியபடி,
பல நாட்கள் கழித்து,
"மிகவும்" பழக்கப்பட்ட,
என் அருமை தோழிக்கு,
அவள் கண்களுக்கு
வெளிச்சம் கொடுத்து,
உயிர் பெற வைத்த,
உன் நினைவுகளுக்கு,
உன்னவளின் நன்றிகள்
என்றென்றும்....

Thursday, May 20, 2010

உலகம்

தென்னையும் ஓட்டுவில்லைகளும்
பேசிக்கொள்ளாத மச்சுமாளிகையில்
ஒட்டிக்கொள்ள விருப்பமில்லாமல்,
குடியேறினேன் அமைதியைத் தேடி...
பிழைக்கத் தெரியாதவள்
என்று ஒதுக்கினார்கள் உறவுகளை விட்டு-
என்ன உலகமிது?????!!!!!!!!!

Tuesday, May 4, 2010

ஏக்கம்

என் எண்ணங்களை
விலை போட்டு விற்க விருப்பமில்லாமல் வீட்டிற்குள்
அடுக்கி வைத்திருக்கிறேன்-
"கவிதைகளாக"

முதுமைப் பருவம்

பணமிருந்தும், நேரமிருந்தும்,
உழைக்கத் தெம்பின்றி,
காத்துக்கொண்டிருக்கிறேன் பேரக்குழந்தைகளின் வரவிற்கு...

நடுத்தர பருவம்


மீளா இன்பதிலிருந்து,
மீள மனமின்றி,
குழவிகளுக்காக உழைத்துக்கொட்டுகிறேன்...

இளமைப் பருவம்

காதலில் விழுந்தேன்
கவலைகளால்,
காரணமின்றி கிறுக்கினேன் கவிதைகளாய்

குழந்தைப் பருவம்


கவி புனைய இச்சை கொண்டு
கவிதைகளை சிந்தித்தேன்
ஒரு பதம் கூட தோன்றவில்லை மனதினில்...

தெய்வம்

ன் இருதயம் நெகிழ
வெறித்து பார்த்தேன்
உண்மைப் பொருளினை..
என் கண்களை நம்ப இயலாத காரணத்தினால்
வேறு சிறந்த கண்களை வரமாகக் கேட்டேன்
என் முன் தோன்றிய இறைவனிடம்..
முன் ஜென்மன் நான் செய்த புண்ணியமோ,
இதற்கு காரணம்?????

Saturday, May 1, 2010

மரணம்

இமைபொழுதும் மரணம்தான்
அது முடிந்து விட்ட பிறகு..
ஒவ்வொரு உயிரும் இறக்கிறது
என்கிறான் மனிதன்.
உயிரற்ற காலம் கூட இறந்துகொண்டிருகிறது
என்பதை உணராத காரணத்தினால்..
சடங்குகள் செய்து,
மனநிறைவோடு அனுப்பி வைத்து வருகிறான்
இறந்த மனித உடலை-
புழு பூச்சிகளின் சாவிற்கு
சடங்குகள் ஏதும் செய்வதில்லையே-
ஏன்?
மனிதனின் உருவமும்,
செய்த தவறுகளும் பெரியன
என்பவைதாம் காரணங்களோ???!!!

-யவனா

காரணம் என்னவோ...???ஒவ்வொருவரும் என்னிடம் பேசும்
ஒவ்வொரு வரிகளும்,
கவிதை வரிகளாய் ஏன் இதயத்தினுள்ளே
....
காரணம் என்னவோ?

-யவனா

ஆசைகள் பல முடியாத காலங்களில்...

நிர்வாணமாய் இருந்த பருவத்தில்
உடை உடுத்தி பார்க்க ஆசைப்பட்டு,
பாவாடை சட்டை அணியும் பருவத்தில்
தாவணி உடுத்தி பார்க்க ஆசைபட்டு,
தாவணி அணியும் பருவத்தில்
புடவை உடுத்தி பார்க்க ஆசை பட்டு,
புடவை கட்டும் பருவத்தில்,
அன்னையாக ஆசை பட்டு,
அன்பிற்குரியவரிடம் அவளை ஒப்படைத்தால்..
பெற்றோரின் துணையோடு...
துணையின் பராமரிப்பில்,
தாயான பின்பு,
தன்னலமற்றவளாய்,
தன பிஞ்சு பருவங்களைக் கடக்கையில்,
தான் தன்
பருவங்களை நினைவு கூர்ந்த போது,
ஏதோ திடீரென்று ஞாபகம் வந்தவளாய்
தான் கடைசி பருவத்தில் பயணிக்கிறோம்
என்றுணர்ந்து
சிரித்த படியே
சோறுஊட்டினாள்
தன் பேத்திக்கு....


-யவனா

நன்றி

எக்காலமும் உன் நினைவுகளை மறவாமல்
இக்கணமும்,
முக்காலமும்,
நன்றியுணர்ச்சியோடு
என்றென்றும் நான்
அக்காலம் நீ எனக்கு செய்த
உதவியினாலேயே
இக்காலம் நான் இங்கு வாழ்கிறேன் என்பதை
மறந்து விடவில்லை நான்...
நன்றியை விவரிக்க இயலாமல்,
இத்துணை வார்த்தைகளைத் தேடியும்,
என் கடன் சுமை குறையவில்லை ..
என் பிணம் கல்லறை செல்லும் வரை,
"தீராத" கடன் இது-
நான் உனக்குப் பட்ட நன்றிக்கடன்....

-யவனா

Friday, April 30, 2010

அவள் வாழ்வின் பலம்

அவள் வாழ்வில்,
அவ்விறைவன் பலமாகப் படைத்தது
ஒன்றே ஒன்றைத்தான் -
கண்களில் கண்ணீர் சுரக்கும் சுரப்பிகளை......

-யவனா

யார் செய்த பாவம்????

கருவறையை விட்டு,
வெளியுலகை எட்டிப் பார்க்கத் துடிக்கும் நிலையில்,
மடியினில் சுகமான பாரத்தை ஏற்றிக்கொண்டும்,
வேலைக்குச் செல்கிறாள்-வறுமையின் காரணமாய்....
தமிழச்சி இந்நிலைக்கு ஆளாக,
முன் ஜென்மம் யார் செய்த பாவம் காரணமோ????????


-யவனா
அசிங்கமான கம்பளிப்பூச்சி
அம்மாவிடமிருந்து,
அழகான பட்டாம்பூச்சி
குழந்தை வருவதைப் போலத்தான்
மாதவியிடமிருந்து
மணிமேகலா தெய்வம் தோன்றியதோ????
அதனால் தானோ.....
அவ்வன்னையின் கணவன்
கோவலனும் தெய்வமாதலால்தான்
கண்ணகி அவனை
மீண்டும் ஏற்றுக்கொண்டாளோ????

-யவனா

அழகி

துதிக்கின்ற மாலியே.......
மாலையில்
மறைந்து
மக்கள்
கண் மயக்கி,
சற்று
நேரத்தில் கவலையுற்றுதான்
உன்
மனைவியை அனுப்பி வைக்கிறாயோ உலகைக்காக்க??
அவள்
அழகில் நீயே மயக்கமுற்று,
மாதமொருமுறை
அவளை அனுப்ப மறுக்கும்போது,
நாங்களெல்லாம்
எம்மாத்திரம்???
அவள்
அழகுக்கு முன்னே..........
-யவனா

வேய்ந்த கூடைமடல் மடலாய்ப் பின்னல்கள் ....
திக்கு திசை தெரியாமல் தவிக்கிறான் ..
பாவம் அந்த அப்பாவி வெள்ளையன் ...
மனதை மயக்கும் அப்பின்னல்களின் தாயாய்-
ஒரு இளம் தமிழச்சி ....
காசு பணம் கொடுத்து,
அப்பின்னல்களை மட்டும் அல்லாமல்,
அதன் தாயையும் விலைக்கு வாங்க எண்ணி,
ஏந்தினான் கைகளை...
பிச்சை எடுத்து பிழைத்தாலும்,
தமிழனுக்கு மட்டுமே தலை வணங்குவேனென்று
தலை நிமிர்ந்து தமிழகத்தின் மண் வாசனையை மேலும் ஏற்றினாள்......... !!!!!!!!!!!!!

-யவனா