பின் தொடருபவர்கள்

Saturday, May 29, 2010

உன்னை நினைத்து கிறுக்கிக்
கொண்டிருந்த
தனிமை நிசப்த இரவில்,
என் பேனா முள்ளும் காகிதமும்
பேசிக்கொள்ளும் ஒலியும்,

மின்சாரம் இல்லா இவ்விரவில்,
என் கையோடு கூடிய   பேனா
நிழலின் ஒளியும்,


மழையும்,  காற்றும்  நின்ற
புழுக்கத்தில்
என் நெற்றியில் வடியும்
வியர்வையும்,


மெல்ல தென்றல் வீச ஆரம்பித்ததில்,
நடனமிடும் சாளரத்தின் ஆடையும்,


நடுநிசியிலும் திருட்டுத்தனமாய்
கிறுக்கிக் கொண்டிருக்கும் மூடத்தனமான அசாத்தியத் தைரியமும்,


உடைகளும்,புத்தகங்களுமாய் கிடந்த
என் படுக்கை அறையின்
அலங்கோலங்களையும் அரை வெளிச்சத்தில்
இரசித்தபடி,


இப்படியாக என்னென்னவோ மனதிற்குள்
உளறியபடி,
பல நாட்கள் கழித்து,
"மிகவும்" பழக்கப்பட்ட,
என் அருமை தோழிக்கு,
அவள் கண்களுக்கு
வெளிச்சம் கொடுத்து,
உயிர் பெற வைத்த,
உன் நினைவுகளுக்கு,
உன்னவளின் நன்றிகள்
என்றென்றும்....

6 comments:

  1. //என் பேனா முள்ளும் காகிதமும்
    பேசிக்கொள்ளும் ஒலியும்,//

    ///மெல்ல தென்றல் வீச ஆரம்பித்ததில்,
    நடனமிடும் சாளரத்தின் ஆடையும்,//

    ஆஹா...யாவனா அருமையாய் வந்திருக்கு கவிதை... எழுத்துகளில், ரசனையில் நல்ல முனேற்றம்.எழுதுங்கள்...நிறைய எழுதுங்கள்...சித்திரமும் கைபழக்கம்...வாழ்த்துகள்...

    வோர்ட் வெரிபிகேசனை நீக்கிவிடவும்...அனைவரும் கருத்து இட வசதியாய் இருக்கும்...

    ReplyDelete
  2. ஒரு நல்ல தலைப்பு வைத்திருக்கலாமே...
    follower link add பண்ணுங்க...

    ReplyDelete
  3. http://allinalljaleela.blogspot.com/2010/06/blog-post_05.html

    அன்பு யாவனா இந்த பக்கம் உபயோகமாய் இருக்கும்...

    ReplyDelete
  4. //மின்சாரம் இல்லா இவ்விரவில்,
    என் கையோடு கூடிய பேனா
    நிழலின் ஒளியும்,///

    எனக்கு கவிதையாக பாராட்ட தெரியவில்லை ...நான் கவி அல்ல ...உன் எழுத்துகளில் உள்ள வார்த்தைகளை பார்க்கும் போது உன் கவிதைகளின் ஆழம் மிக பெரியது ...சிந்தனைகளில் உன் எண்ணம் மேலும் மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமை அருமை ,உங்களின் படைப்பு அருமை !!!!!!!!!!!

    இவம்
    கொங்கு தமிழன்

    ReplyDelete
  6. நல்ல கவிதை சகோதரி. நம் சமுதாயத்தை உயர்த்தும் நெம்புகோல் கவிதையை உங்களில் யார் பாட போகிறீர்கள் என மு.மேத்தா கேட்டாரே அந்த புத்துணர்வு கவிதைகள் உங்கள் பாடல் பொருளாக இந்த அண்ணனின் நேயர் விருப்பம்.

    ReplyDelete

தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................