பின் தொடருபவர்கள்

Friday, April 30, 2010

வேய்ந்த கூடை



மடல் மடலாய்ப் பின்னல்கள் ....
திக்கு திசை தெரியாமல் தவிக்கிறான் ..
பாவம் அந்த அப்பாவி வெள்ளையன் ...
மனதை மயக்கும் அப்பின்னல்களின் தாயாய்-
ஒரு இளம் தமிழச்சி ....
காசு பணம் கொடுத்து,
அப்பின்னல்களை மட்டும் அல்லாமல்,
அதன் தாயையும் விலைக்கு வாங்க எண்ணி,
ஏந்தினான் கைகளை...
பிச்சை எடுத்து பிழைத்தாலும்,
தமிழனுக்கு மட்டுமே தலை வணங்குவேனென்று
தலை நிமிர்ந்து தமிழகத்தின் மண் வாசனையை மேலும் ஏற்றினாள்......... !!!!!!!!!!!!!

-யவனா

3 comments:

  1. சம்பத் குமார்May 4, 2010 at 6:27 PM

    அன்பு தங்கைக்கு
    உன் கவிதைகள் அருமை ...
    அதில் உள்ள கருத்துக்கள் செழுமை.....
    என் இமைகள் மூடவில்லை ...
    உன் கவிதை என்னும் அறிவுகரங்கள் இருக்கும் போது....
    என் இமைகளை மூட எவ்வாறு அனுமதிக்கும் ?

    ReplyDelete
  2. என்னவென்று தெரியவில்லை..
    நன்றி சொல்ல எழும்போது மட்டும் வார்த்தைகள் மடிந்து விடுகின்றன என் இதயத்தில்..
    மன்னித்துவிடுங்கள் அண்ணா...

    ReplyDelete

தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................